Homeசெய்திகள்தமிழ்நாடுமுதியவரை மீட்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்த காவல் துறையினருக்கு மனித உரிமை ஆணையம் பாராட்டு

முதியவரை மீட்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்த காவல் துறையினருக்கு மனித உரிமை ஆணையம் பாராட்டு

-

மனித உரிமை ஆணையம் என்பது கண்டிக்க மட்டுமல்ல மனிதநேயம் காக்கப்படுபவர்களுக்கு பாராட்டவும் இருக்கிறது என நீதி அரசர்கள் பேசியுள்ளனர்.

நீண்ட காலமாக குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட, நோய்வாய்ப்பட்ட முதியவரை மீட்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்த திருவள்ளுவர் மாவட்ட காவல் துறையினருக்கு மனித உரிமை ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது.

 

 

முதியவரை மீட்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்த காவல் துறையினருக்கு மனித உரிமை ஆணையம் பாராட்டு

கடந்த 23 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்தைச் சேர்ந்த நேதாஜி நகரில் உள்ள ஜெகநாதன் என்பவர் நீண்ட நாட்களாக குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு நோய் வாய் பட்டு இருந்து வந்துள்ளார். இந்த தகவலை அறிந்த மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினருக்கு தகவலை தெரிவித்துள்ளனர்.

 

தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வயது முதிர்ந்த அவரை மீட்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் 10 நாட்களிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருப்பினும் தகவலை அறிந்து 15 நிமிடத்திலேயே ஜெகநாதனை மீட்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்ததனால் மனித உரிமை ஆணையத்தின் சார்பில் மனித உரிமையை பாதுகாக்க சிறந்த முறையில் பணியாற்றிய திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நீதி அரசர் ராஜா இளங்கோ மற்றும் கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நீதியரசர்கள் மேடைப்பேச்சு

மனித உரிமை ஆணையத்தின் பணி என்பது மனித உரிமைகள் மீறப்படும் போது அதை கண்டிப்பதாகவும் அல்லது அதனை சரி செய்வதாகவும் இருந்து வந்தது. ஆனால் இது முதல்முறையாக இந்த ஆணையத்தில் நடைபெறுகின்ற நிகழ்வு என்பது மனிதநேயத்தோடு பணி செய்பவர்களை பாராட்டக்கூடியதாகவும் அவர்களை பெருமைப்படுத்துவதாகவும் இருக்க போகிறது.

 

முதியவரை மீட்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்த காவல் துறையினருக்கு மனித உரிமை ஆணையம் பாராட்டு

மனித உரிமைகள் மீறப்படும் போது கேள்வி கேட்பதைவிட மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் மனிதநேயம் போற்றப்பட வேண்டும் என்கின்ற எண்ணத்தில் நமது உறுப்பினர் கண்ணதாசன் அவர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கும்முடிபூண்டி வட்டாரத்தில் உள்ள ஒரு முதியவர் நீண்ட நாட்களாக அவர்கள் குடும்பத்தில் புறக்கணிக்கப்பட்டு நோய்வாய் பட்டு இருந்தார் ஆதரவு என்று தவித்துக் கொண்டிருந்தபோது அவருக்கான மருத்துவ உதவியும் அவருக்கான பாதுகாப்பையும் உறுதி செய்த காவல்துறை 15 நிமிடங்களுக்குள் ஜெகநாதன் என்பவரை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர்.

முதியவரை மீட்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்த காவல் துறையினருக்கு மனித உரிமை ஆணையம் பாராட்டு

இவ்வளவு சீக்கிரமாக ஒருவரை மீட்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்து உள்ள காவல்துறை சமூகத்தில் எதிர்மறையான எண்ண ஓட்டத்தில் மக்கள் உள்ளனர். அது அப்படியல்ல அவர்களுக்குள்ளும் மனித நேயம் இருக்கிறது என்கின்ற ஒன்று இந்த சம்பவம் நிரூபித்துள்ளது என நீதியரசர் ராஜா இளங்கோ மற்றும் கண்ணதாசன் ஆகிய இருவரும் தெரிவித்தனர்.

MUST READ