Homeசெய்திகள்தமிழ்நாடுநான் முதல்வன் திட்டம் … கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் - கேரனா புக் லித்தியா...

நான் முதல்வன் திட்டம் … கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் – கேரனா புக் லித்தியா மகிழ்ச்சி

-

- Advertisement -

“முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டம்  மிகுந்த பயனுள்ளதாக உள்ளது, கிராமப்புற மாணவர்களுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதம் – டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 4ஆவது இடத்தை பிடித்த கேரனா புக் லித்தியா மகிழ்ச்சி.நான் முதல்வன் திட்டம் … கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் - கேரனா புக் லித்தியா மகிழ்ச்சிநாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பணித் தேர்வுகள் நடக்கிறது.ஆண்டு நாட்காட்டியில் குறிப்பிட்ட  தேதிகளில் அறிவிப்புகளும், தேர்வுகளை  நடத்துவதும் தேர்வாணையம் மிக சிறப்பாக செயல்படுவதை காட்டுகிறது என சங்கர் ஐஏஎஸ் அகாடமி எம்.டி வைஷ்ணவி சங்கர் கூறியுள்ளாா்

வருவாய் கோட்டாட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் வரும் 90 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்தாண்டு (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது. இந்த தேர்வை 2.38 லட்சம் தேர்வர்கள் எழுதினர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் என 3 கட்டமாக தேர்வு நடந்தது.

190 பேர் பங்கேற்ற இந்த தேர்வில், 189 பேரின் முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுடன் கூடிய தேர்வர்களின் தற்காலிக மதிப்பெண் தரவரிசைப் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.

இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் வைஷ்ணவி சங்கர் அளித்த பேட்டியில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 1 (நேர்முகத் தேர்வு பணிகள்) நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.  இதில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் பயிற்சி பெற்ற 47 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது தமிழக அளவிலான மொத்த தேர்ச்சி விகிதத்தில் 50 சதவீதத்திற்கும் மேலாகும். இதில் முதல் ரேங்கை கதிர் செல்வியும், 3வது ரேங்கை ஹரி ப்ரியங்கா, 4வது ரேங்கை கேரனா புக் லித்தியாவும் பிடித்துள்ளனர். 7வது இடம் லார்ஷன் இஸ்ரேல், 8வது இடம் டியூக் பார்க்கர் ஆகியோரும் எங்கள் மையத்தில் படித்தவர்களென கூறினார்.

மேலும் பேசிய அவர் அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டு நாட்காட்டி வெளியிட்ட தேதிகளில் தேர்வுகளை நடத்துவதும், திட்டமிட்ட தேதிகளில் தேர்வு அறிவிப்பு வெளியாவதும் பாராட்டக்கூடிய ஒன்று என தெரிவித்தார். மற்ற மாநிலங்களில் 3-4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு தேர்வுகள் நடைபெறும், ஆனால் தமிழ்நாட்டில் தான் ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகள் நடைபெறுவதாகவும், தமிழ் தேவர்கள் தொடர்ந்து படிக்கக் கூடிய நிலை இருப்பதாகவும் தேர்வாணையம் சிறப்பாக செயல்படுவதாகவும் கூறினார்.

தேர்வர்களுக்காக தமிழ்நாடு அரசு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளதாகவும்,  தொடர்ச்சியாக தேர்வுகள் நடைபெறுவதால் மாணவர்களின் முழு கவனமும் தேர்வில் இருப்பதாக கூறிய அவர், தமிழ்நாடு முதல்வர் கொண்டு வந்த நான் முதல்வன் திட்டம் மாணவ, மாணவிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்தார்.

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 4ஆவது இடத்தை பிடித்த கேரனா புக் லித்தியா அளித்த பேட்டியில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த நான் கடந்த ஏழு ஆண்டுகளாக யுபிஎஸ்சி தேர்வுக்காக தயாராகி வருகிறேன். அதை படித்துக்கொண்டே குரூப் 1 தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளேன். எனக்கு அப்பா கிடையாது எனது அம்மா தான் என்னை படிக்க வைத்தார். அவரும் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் தன்னார்வலராக பணி செய்து வருவதாகவும், அதில் இருந்து வரும் வருமானத்தை வைத்து படிக்க வைத்ததாகவும் முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டம்  மிகுந்த பயனுள்ளதாக இருந்ததாக கேரனா தெரிவித்தார்.

விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்பு – எடப்பாடி வலியுறுத்தல்

MUST READ