Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல்வர் இறங்கி வந்து மனு வாங்குவார்னு எதிர்பாக்கவே இல்ல...

முதல்வர் இறங்கி வந்து மனு வாங்குவார்னு எதிர்பாக்கவே இல்ல…

-

விருதுநகரில் மாற்றுத்திறனாளி இளைஞர்களை பார்த்ததும் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து மனுவை பெற்ற முதலமைச்சர் என மகிழ்ச்சி தெரிவித்த இளைஞர்.

முதல்வர் இறங்கி வந்து மனு வாங்குவார்னு எதிர்பாக்கவே இல்ல...

தமிழ்நாடு அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்டப்பணிகள் மக்களுக்கு முழுமையாக சென்றடைகிறதா? என மாவட்டம் வாரியாக சென்று கள ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும், முதற்கட்டமாக கோவையில் தொடங்க இருப்பதாகவும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி கள ஆய்வு பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 5 ம் தேதி கோவையில் தொடங்கினார். அடுத்ததாக இன்று விருதுநகர் மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் அருகே கன்னிச்சேரி புதூரில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் முதல்வர் மு க ஸ்டாலின் கள ஆய்வு செய்தார். முதல்வரை நேரில் சந்தித்தது அளப்பரிய மகிழ்ச்சியை அளித்ததாக அவரை சந்தித்த பட்டாசு தொழிலாளிகள் பெருமிதத்துடன் கூறினர்.

பட்டாசு தொழிலாளி

கள ஆய்வு ,மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் திறப்பு விழா, மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள், கட்சியினருடனான கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின்
இன்று பிற்பகல் விருதுநகர் வந்துள்ளார். அவருக்கு மதுரை- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை அருகே கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

அப்போது வேனில் இருந்து திடீரென இறங்கிய முதல்வர் சாலையில் நடந்து பொதுமக்களிடம் கைகுலுக்கி வரவேற்பை ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து கன்னிச்சேரிபுதூர் பட்டாசு ஆலையில் கள ஆய்வு செய்தார். அங்கு பட்டாசு தொழிலாளிகளுடன் கலந்துரையாடினார். அவர்களுக்கான குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்திருக்கிறார்.

முதல்வரை நேரில் காணுவோம் என தாங்கள் நினைத்து பார்க்கவில்லை எனவும் மிகவும் எளிமையான முறையில் அவரை சந்தித்தது மகிழ்ச்சியை அளித்ததாக அவரை சந்தித்த பட்டாசு தொழிலாளிகள் பெருமிதத்துடன் கூறினர். மகளிர் உரிமைத் தொகை கிடைக்கிறதா என்று அவர்களிடம் முதல்வர் கேட்டறிந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இளைஞர் ஒருவர் ”இறங்கி வந்து மனு வாங்குவார்னு எதிர்பாக்கவே இல்ல..” என  கள ஆய்வின்போது மனுவுடன் காத்திருந்த இளைஞரைப் பார்த்ததும் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து மனுவைப் பெற்றார் முதலமைச்சர் என மகிழ்ச்சியை பகிர்ந்த கொண்டுள்ளார்.

ஓய்ந்து போன ஓ.பி.எஸ்: நொந்து தனியும் ஆதவாளர்கள்

MUST READ