தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், அடுத்தாண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்துக்கு சென்ற தமிழக முதலமைச்சர், அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துக் கொண்டு பேசினார்.
பழைய நாடாளுமன்றக் கட்டிடம் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
அத்துடன், ஒசாகாவில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு சென்ற முதலமைச்சர், ஆலையைப் பார்வையிட்டு அந்நிறுவனத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். பின்னர், ஜப்பான் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதலமைச்சர், இரண்டு நாள் ஒசாகா பயணத்தை முடித்துக் கொண்டு, புல்லட் ரயில் மூலம் தலைநகர் டோக்கியோவுக்கு சென்றார்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளிதழ் செய்திகளை ‘ஐ-பேடில்’ படித்தவாறே, புல்லட் ரயிலில் பயணம் மேற்கொண்டார். பின்னர், டோக்கியோ சென்ற அவருக்கு ஜப்பானுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த நிகழ்வின் போது, தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.