தமிழ்நாட்டிற்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்றும் உழைத்துக்கொண்டு இருப்பேன் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற அலுவலக வாளகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாணவிகளுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதிகளை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி உள்ளதாகவும், ஒன்றிரண்டு வாக்குறுகள் எஞ்சி உள்ளதாகவும், விரைவில் அதையும் நிறைவேற்றுவோம் என்றும் தெரிவித்தார். நீதிக்கட்சி ஆட்சியில் மதிய உணவு திட்டம் கொண்டுவரப்பட்டதாகவும், பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத்திட்டத்தை சிறப்புடன் செயல்படுத்தியதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
அதேபோல், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தன்னால் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். 7-வது முறையும் தி.மு.கதான் ஆட்சிக்கு வரும் என்றும், மக்களுக்கு பணியாற்ற, தொண்டாற்றவே தாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று எண்ணுவதாகவும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டிற்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்றும் உழைத்துக் கொண்டு இருப்பேன் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.