தமிழ்நாட்டிலிருந்து 57 மாணவா்கள் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனா் மற்றும் சென்னை செனாய் நகரில் ரூ.40 கோடியில் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.சென்னை செனாய் நகரில் 500 மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய வகையில் ரூ.40 கோடியில் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். தமிழ்நாட்டிலிருந்து 57 மாணவா்கள் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனா். UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற 57 பேரில் 50 பேர் நான் முதல்வன் திட்ட மாணவர்கள் எனக் கூறி இத்திட்டத்தை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பல்வேறு முயற்சிகளின் விளைவாகத் தான் குடிமைப் பணியில் தோ்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது எனவும் UPSC தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சோ்ந்த 57 மாணவா்களுக்கு நாளை மறுநாள் பாராட்டு விழா நடைபெற போவதாகவும் தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்