தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் முடிவிற்கு வந்தது
அதன்படி, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக இருந்த உதயச்சந்திரன் இ.ஆ.ப., நிதித்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதன்மைச் செயலாளராக முருகானந்தம் இ.ஆ.ப. நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் உள்துறைச் செயலாளராக அமுதா இ.ஆ.ப., நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தை அதிகமுறை ஆட்சி செய்த கட்சி எது தெரியுமா?- விரிவான தகவல்!
சுகாதாரத்துறைச் செயலாளராக ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப., சென்னை மாநகராட்சி ஆணையாளராக டாக்டர் ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., ஊரக வளர்ச்சித்துறைச் செயலாளராக செந்தில்குமார் இ.ஆ.ப., பொதுப்பணித்துறைச் செயலாளராக சந்திரமோகன் இ.ஆ.ப., கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர், பாதுகாப்புத்துறைச் செயலாளராக ஜெகன்நாதன் இ.ஆ.ப., இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையர் மைதிலி ராஜேந்திரன் இ.ஆ.ப., மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளராக நந்தகுமார் இ.ஆ.ப., பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை இயக்குநராக கணேஷ் இ.ஆ.ப., போக்குவரத்துத்துறைக் கூடுதல் முதன்மைச் செயலாளராக பணீந்திர ரெட்டி இ.ஆ.ப., சுற்றுலா, கலாசாரம், ஊரக வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளராக மணிவாசன் இ.ஆ.ப. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.