மோசடி புகாரில் தருமபுரி முன்னாள் மாவட்ட ஆட்சியர் மலர்விழி, அரசு ஒப்பந்ததாரர் உள்ளிட்டோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
அரிசிக்கொம்பன் வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றம்!
தருமபுரி மாவட்டத்தில் 2018- ஆம் ஆண்டு முதல் 2020- ஆம் ஆண்டு வரை கிராம ஊராட்சிகளுக்கு மாநில நிதிக்குழு மாநில நிதியில் இருந்து சொத்து வசூல் ரசீது புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. அதில், 1 கோடியே 31 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் கையாடல் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், இது குறித்து விசாரித்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறைக் காவல்துறையினர், அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த மலர்விழியின், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், புதுக்கோட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் தாஷிர் உசேன் அரசு ஒப்பந்ததாரர் வீரய்யா பழனிவேல் ஆகிய மூன்று பேரின் வீடுகள் உள்பட 10 இடங்களில் நேற்று (ஜூன் 06) தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
“தமிழகத்தில் வெப்ப அலை வீசும்”- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வீரய்யா பழனிவேல், தாஷிர் உசேன் தொடர்புடைய இடங்களில் சுமார் 9 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.