Homeசெய்திகள்தமிழ்நாடுவிழுப்புரம் சாலையில் கோரவிபத்து…4 மீனவ பெண்கள் உயிரிழப்பு… தமிழக அரசு நிதியுதவி அறிவிப்பு!

விழுப்புரம் சாலையில் கோரவிபத்து…4 மீனவ பெண்கள் உயிரிழப்பு… தமிழக அரசு நிதியுதவி அறிவிப்பு!

-

விழுப்புரத்தில் சாலை விபத்தில் மீனவ பெண்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு நிதியுதவியும்  தமிழக அரசு அறிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டி புதுக்குப்பம் மீனவ கிராமப் பகுதியிலிருந்து மீன்விற்கும்  பெண்கள் பாண்டிச்சேரியில் மீன்களை மொத்தமாக வாங்கி வந்து கிராம பகுதியில் விற்கும் பணியினை செய்து வருகின்றனர்.

இன்று அதே போல் மீன்கள் அதிகம் விற்பனையாகும் என்பதால் புதுச்சேரிக்கு மீன் வாங்க அதிகாலை புதுக்குப்பம் பெண்கள் லட்சுமி,கோவிந்தம்மாள்,நாயகம்,கமலம்,கெங்கையம்மாள்,பிரேம ஆகிய 6 பேரும் ஆட்டோவுக்காக கிழக்கு கடற்கரை சாலையோரம் நின்றுகொண்டிருந்தனர்.அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வேகமாக வந்த சொகுசு கார் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்த நின்றுக் கொண்டிருந்தவர்களின் மீது மோதியது.கார் கவிழ்ந்து நொறுங்கியது.இதில் காரில் வந்த 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதில் லட்சுமி,கோவிந்தம்மாள் ஆகிய 2 பேரும் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர்.மற்ற 4 பேரும் படுகாயம் அடைந்தநிலையில் கனக செட்டிக் குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலும் கெங்கையம்மாள் ,நாயகம்  ஆகிய 2 பேரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.மேலும் 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கார் கவிழ்ந்து நொறுங்கியதில் காரில் வந்த 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா  ரூ.2 லட்சம் நிதியுதவியும்,சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு  ரூ,50,000 நிதியுதவியும் முதலமைச்சர் நிதியிலிருந்து வழங்கிடவும் உத்திரவிட்டுள்ளார்,இறந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும்  தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர்.

MUST READ