பெரியார் பற்றி விவரம் தெரியாம பேசுபவர்களை என்ன செய்வது எல்லா காலங்களிலும் இது போன்ற அதிமேதாவிகள் அரிவு ஜீவிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இரும்பு தொன்மையானது தமிழகத்தில் தோன்றியது என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியது உண்மை அதனால் தான் பதில் ஏதும் பிரதமர் மோடி கூறவில்லை. காட்பாடியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
எருது விடும் திருவிழாவில் மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள கடும் விதிமுறைகளை தளத்த கோரி வேலூர் மாவட்ட எருது விடுவோர் சங்கம் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் மனு உடனடியாக வேலூர் மாவட்ட ஆட்சியர் வேலூர் மாவட்ட எஸ்பி ஆகியோரை தனது இல்லத்திற்கு வரவழைத்து ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர் துரைமுருகன்.
வேலூர் மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான எருது விடும் போட்டியை பழைய நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தற்போது காவல்துறை சார்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் எருது விடும் போட்டியை நடத்தும்போது காவல்துறையினர் எருது விடும் போட்டியை நடத்துபவர்களை தடியடி நடத்தி விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
எருது விடும் போட்டியில் கால நேரத்தை நீட்டிக்க வேண்டும் முன்பிருந்தபடியே எருது விடும் போட்டியை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகர் பகுதியில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இல்லத்திற்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள எருது விடும் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு அளித்தனர்.
இந்த மனுவினை பெற்றுக்கொண்ட அமைச்சர் துரைமுருகன் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து உடனடியாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் ஆகியோரை தனது இல்லத்திற்கு நேரில் வரவழைத்து எருது விடும் திருவிழா குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில்
தந்தை பெரியார் பற்றி தொடர்ந்து அவதூறு கூறிவரும் சீமான் குறித்து கேட்டதற்கு இத்தனை ஆண்டு காலம் ஆகி கூட இவ்வளவு பெரிய நிகழ்வுகள் எல்லாம் நடந்து கூட சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இனத்திற்கு எல்லாம் என்ன நிலைமை ஏற்பட்டது. இப்பொழுது எப்படி மாறி உள்ளார்கள் என தெரிந்து கூட விவரம் தெரியாமல் பேசுபவர்களை என்ன செய்வது எல்லா காலங்களிலும் இது போன்ற அதிமேதாவிகள் அரிவு ஜீவிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இரும்பு தொன்மையானது என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதற்கு தற்பொழுது வரை பிரதமர் மோடி எதுவும் பதில் கூறவில்லை என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு
இரும்பு தொன்மையானது தமிழகத்தில் தோன்றியது என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியது உண்மை அதனால் தான் பதில் ஏதும் பிரதமர் மோடி கூறவில்லை. மேலும் ஏற்கனவே பிராணிகள் வதை சட்டம் என்று கூறி மத்திய அரசு ஜல்லிக்கட்டு மற்றும் எருது விடும் நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று தெரிவித்திருந்தனர். இதன் பிறகு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தமிழரின் பாரம்பரிய போட்டிகளான ஜல்லிக்கட்டு போட்டி எருது விடும் போட்டிகளை நடத்த வேண்டுமென அனுமதி பெற்று கொடுத்தேன் அதனால்தான் தற்போது வரை தமிழகத்தில் ஜல்லிக்கட்டு எருது விடும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது இருக்கும் அதிகாரிகள் ஜல்லிக்கட்டில் தன் உயிரை பணயம் வைத்து காளைகளை அடக்க முயற்சிக்கின்றனர். ஆனால் காளைகள் அவர்களை தூக்கி வீசிவிடுகிறது இதனால் சில வீரர்கள் உயிரிழந்து விடுகின்றனர். ஆனால் வட மாநிலங்களில் நடைபெறும் எருது விடும் நிகழ்ச்சி அப்படியல்ல மாடு விடப்பட்டால் நடுரோட்டில் வேகமாக ஓடும் அப்போது மாட்டின் மீது ஒருவர் இருவர் கை வைப்பார்கள் அதில் சிலருக்கு காயம் ஏற்படும் இதை நான் சிறிய வயதில் இருந்து பார்த்து வருகிறேன்.
ஆனால் தற்போது தேவையில்லாமல் அதிகாரிகள் சட்டம் ஒழுங்கை உருவாக்கி வருகின்றனர். எல்லா பகுதிகளிலும் தட்டி கட்ட வேண்டும் அதன் பிறகு தான் காளையை விட வேண்டும் என்று தெரிவிக்கின்றார்கள். ஆனால் அருகாமையில் உள்ள திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளியில் எருது விடும் நிகழ்ச்சியில் இது போன்ற கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. ஆனால் தங்கள் பகுதியில் மட்டும் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்து எருது விடும் நிகழ்ச்சியை நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் எருது விடும் நிகழ்ச்சியின் போது பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கண்காணித்து செய்ய வேண்டும். ஆகவே காலங்காலமாக நடந்து வரும் தமிழரின் பாரம்பரிய போட்டியான எருது விடும் நிகழ்ச்சிக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது அவ்வளவு நல்லதில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.யிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.