Homeசெய்திகள்தமிழ்நாடுதொழிலாளர்கள் மீது தீ! வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தொழிலாளர்கள் மீது தீ! வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

-

தொழிலாளர்கள் மீது தீ வைத்த சம்பவத்தில் வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்திவேலூர் தாலுக்காவில் ஜேடர்பாளையம் அருகே கடந்த 13ந் தேதி அதிகாலை, ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலைக் கொட்டகையில் பணி புரியும் வட மாநில இளைஞர்கள் தங்கியுள்ள அறையில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.

தொழிலாளர்கள் மீது தீ! - வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
வாலிபர்

இதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் (19), சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுகிராம் (வயது 22) ஆகியோர் தீக்காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த எஸ்வந்த் (வயது 19), கோகுல் (வயது 23) ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

இந்த நிலையில், ராஜேஷ் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலையில் உயிரிழந்தார். சுகிராம் தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், ஜேடர்பாளையம் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதைத் தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட போலீசார் ஜேடர்பாளையம், பரமத்திவேலூர் பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பது தெரியவந்துள்ளது.

MUST READ