தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் வருமான வரி சோதனை
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
சாய் சில்க்ஸ் கலாமந்திர் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றுவருகிறது. இதேபோல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள வரமகாலட்சுமி ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் உள்ள வரமகாலட்சுமி பட்டு சேலையிலும் சோதனை நடைபெற்றுவருகிறது.
கலாமந்திர், மந்திர், வரமகாலட்சுமி சில்க்ஸ், கே.எல்.எம் பேஷன் மால் உள்ளிட்ட பெயர்களில் கலாமந்திர் குழுமம் புடவை விற்பனை செய்துவருவது குறிப்பிடதக்கது.