Homeசெய்திகள்தமிழ்நாடுதிண்டுக்கல்லில் தொழிலதிபர்களை குறிவைக்கும் வருமான வரித்துறை

திண்டுக்கல்லில் தொழிலதிபர்களை குறிவைக்கும் வருமான வரித்துறை

-

ஒட்டன்சத்திரம் பகுதியில் பிரபல தொழிலதிபர்களின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை- 20க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டுள்ளனர்.திண்டுக்கல்லில் தொழிலதிபர்களை குறிவைக்கும் வருமான வரித்துறை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் குழந்தைவேல் மற்றும் முருகன் ஆகிய சகோதரர்களுக்கு சொந்தமாக  இயங்கி வரும் தனபாக்கியம் நகைக்கடை, வஞ்சியம்மன் பெட்ரோல் பங்க், மற்றும் அவர்களின் வீடுகளில் இன்று காலை 10க்கும் மேற்பட்ட  கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 30க்கும் மேற்பட்டோர்  சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து சத்திரப்பட்டியில் நிதி நிறுவன அதிபர் செந்தில்குமார் என்பவருடைய வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். செந்தில்குமார் ராயர் சிட்ஃபண்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் தமிழ்நாடு மட்டுமன்றி மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள தொழில் அதிபர்களுக்கு நிதி அளித்து வந்துள்ளார். செந்தில்குமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவிப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருமான வரி சோதனைக்கு ஆளாகியுள்ள செந்தில்குமார் பாஜக நிர்வாகிகளுக்கு நெருக்கமானவராக  இருந்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் உறவினராகவும் செந்தில்குமார் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொழிலதிபர்கள் நிதி நிறுவன அதிபர்கள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னால் அமைச்சா் விஜயபாஸ்கர் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

MUST READ