Homeசெய்திகள்தமிழ்நாடுகரூரில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை

கரூரில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை

-

கரூரில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தொடர்புடைய இடங்களில் இன்று மீண்டும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

Image

கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு தொடர்புடைய 10 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடத்திவருகின்றனர். இதேபோல் கரூரில் செந்தில் பாலாஜியின் உதவியாளராக இருந்த ரமேஷ், அசோக்கின் உதவியாளர் சண்முகம், பைனான்சியர் கணேஷ் முருகன், கல்குவாரி நடத்திவரும் பாலவிநாயகம் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். கரூரில் 3-வது கட்டமாக மத்திய துணை ராணுவ படை வீரர்களின் பலத்த பாதுகாப்புடன் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுவருகிறது. ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் மணி வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுவருகிறது.

கரூரில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை..!

ஏற்கனவே கடந்த மே மாதம் 26 மற்றும் ஜூன் 23 ஆகிய தேதிகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் சோதனை நடைபெற்றுவருகிறது.

MUST READ