Homeசெய்திகள்தமிழ்நாடுகரூரில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை

கரூரில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை

-

கரூரில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை

கரூரில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நடைபெற்றுவருகிறது.

கரூரில் என்ஜினீயர் வீடுகள் உள்பட 7 இடங்களில் மீண்டும் வருமான வரி சோதனை

கரூரில் கடந்த மாதம் 26 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடு அலுவலகம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் பல்வேறு ஆவணங்கள், பென்டிரைவ், ஹார்டிஸ்க் போன்றவை எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்து தடை செய்யப்பட்ட பகுதி என நோட்டிஸ் ஒட்டிச் சென்றிருந்தனர்.

Image

இந்த நிலையில் 28 நாட்களுக்கு பிறகு நேற்று கரூரில், வருமானவரி துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை தொடங்கி நடத்தி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 7 இடங்களில் சோதனை மேற்கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இரவு 10 மணிவரை சோதனை மேற்கொண்டனர். இன்று இரண்டாவது நாளாக கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் ஜெகவர் பஜார் உள்ள பழனி முருகன் நகைக்கடையில் இரண்டாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ