இரண்டு குழுமங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறைச் சோதனையில், வருமான வரித்துறைச் சோதனை நிறைவடைந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து 1,000 கோடி ரூபாய்க்கு அதிகமாக வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது. சவீதா குழுமத்தில் 255 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ மாணவி மரணம் : கடும் தண்டணை பெற்றுத்தர சீமான் கோரிக்கை..
கடந்த வியாழன்கிழமை முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை தொடர்பான 50- க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதேபோல், சவீதா கல்விக் குழுமம் தொடர்பான 20- க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரிச் சோதனை நடைபெற்றது. கடந்த ஐந்து நாட்களாக இந்த இரண்டு குழுமங்களுக்கு தொடர்பான இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக, வருமான வரித்துறை உயர்நீதிமன்றத்தின் தொடுத்த வழக்கின் காரணமாக, ஜெகத்ரட்சகன் நடத்தும் அறக்கட்டளைக்கு கடந்த 2017- ஆம் ஆண்டு முதல் வரி விலக்கு சலுகை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இந்த காலக்கட்டத்திற்கு முன் அளிக்கப்பட்ட வரி விலக்கு சலுகையைத் தவறாகப் பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு முக்கிய மின்னணு ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
டெல்டா மாவட்டங்களில் கடையடைப்புப் போராட்டம்!
ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் இருந்து 1,050 கோடி ரூபாய் பணம் வரி ஏய்ப்புச் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன. மேலும், 4.5 கோடி ரூபாய் ரொக்கப் பணமும், 15 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் சவீதா குழுமத்தின் கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்பான இடத்தில் இருந்து 27 கோடி ரூபாய் பணம், மற்றும் 18 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்கள் மூலமாக வரும் வருவாயை முறையாகக் கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோதனையின் அடிப்படையில் நான்கு நாட்களுக்கு பிறகு ஜெகத்ரட்சகன் விசாரணைக்காக, வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளன.
மருத்துவ மாணவி மரணம் : கடும் தண்டணை பெற்றுத்தர சீமான் கோரிக்கை..
அதேபோல், ஜெகத்ரட்சகனின் நிறுவன நிர்வாகிகளும், விசாரணைக்கு ஆஜராகும்படியும், முக்கியமாக அறக்கட்டளை நிர்வாகிகளும் ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல், அடுத்த வாரம் சவீதா குழுமம் தொடர்பான நிர்வாகிகள் விசாரணைக்கு ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.