- Advertisement -
மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் உயர்வு
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்
- அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளை தமிழில் மொழி பெயர்த்திட ₹5 கோடி நிதி ஒதுக்கீடு
- இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும்
- இந்த பள்ளிகளில் பணியாற்றும் அனைவரின் பணிப்பலன்கள் பாதுகாக்கப்படும் – நிதியமைச்சர்
- மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ஜூன் மாதம் திறக்கப்படும்.
- பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டிலும் ₹200 கோடி செலவில் பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படும்
- மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்.
- கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ₹2000 ஆக அதிகரிப்பு
- மாணாவர்களுக்கு மிதிவண்டி வழங்க ரூ.305 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டப்படும்; இதன் பராமரிப்பு பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களிடம் அமைக்கப்படும்
- பொது விநியோக திட்டத்தின் உணவு மானியத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு
- விலங்குகள் இனவிருத்தி கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- 4.3 லட்சம் மீனவர்கள் பயன்பெறும் வகையில் மீனவர் நலத்திட்டங்களுக்கு ரூ.389 கோடி ஒதுக்கீடு
- மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூ.30 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- சாலை மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
- கோவையில் ரூ.172 கோடி செலவில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும்
- தமிழ்நாட்டில் கிராமபகுதிகளில் 10 ஆயிரம் குளங்கள், ஊரணிகள் ரூ.800 கோடியில் புதுப்பிக்கப்படும்.