Homeசெய்திகள்தமிழ்நாடுபுழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

-

திருவள்ளூர் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து நின்றது. சோழவரம் ஏரிக்கு நேற்று 70 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று முற்றிலுமாக நின்றது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 312 மில்லியன் கனஅடியாக உள்ளது.

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!18.86 அடி உயரத்தில் தற்போது 8.01 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளது.  சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு 200 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. பூண்டி ஏரியில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

புழல் ஏரிக்கு நேற்று 460 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 550கனஅடியாக அதிகரித்துள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2749 மில்லியன் கனஅடியாக உள்ளது. 21.2 அடி உயரத்தில் தற்போது 18.69 அடி உயரத்திற்கு நீர்இருப்பு உள்ளது. புழல் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 192 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

புழல் ஏரிக்கு பூண்டி ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்

இதே போல 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 435மில்லியன் கனஅடியாக உள்ளது. நேற்று 170 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 100 கனஅடியாக சரிந்தது. 36.61 அடி உயரத்தில் தற்போது 34.64 அடி உயரத்திற்கு நீர்இருப்பு உள்ளது. தொடர்ந்து ஏரிகளை கண்கானித்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ