Homeசெய்திகள்தமிழ்நாடுமேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!

-

- Advertisement -

 

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!
File Photo

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று (ஜூலை 07) காலை 08.00 மணி நிலவரப்படி, விநாடிக்கு 142 கனஅடியில் இருந்து 226 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 85.16 அடியில் இருந்து 84.34 அடியாக குறைந்துள்ளது.

கணவர் தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கக்கோரி நளினி வழக்கு!

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் குறுவைச் சாகுபடிக்காக விநாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழைத் தீவிரமடைந்துள்ள நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கர்நாடகா மாநிலத்தின் முக்கிய அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், வேகமாக நிரம்பி வருகின்றது.

“பொதுநல மனுக்களால் நாங்கள் சோர்வடைந்துவிட்டோம்”- உச்சநீதிமன்ற நீதிபதிகள்!

அந்த வகையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தற்போது கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், வரும் நாட்களில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ