ஒரு சமுதாயத்தை மற்றொரு சமுதாயத்திற்கு எதிராக நிறுத்தி ஆதாயம் தேடும் அரசியலை விரும்புவதில்லை என தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.
“காசாவுக்கு மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ள இந்தியா”!
இந்தி நாளேடான ‘தைனிக் ஜாக்ரன்’- க்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள சிறப்பு பேட்டியில், “இந்தியா கூட்டணி, இந்தியாவை மீட்கும்; மாநிலங்களைச் சமமாக நடத்துதல் உள்ளிட்ட நோக்கங்களுடன் 2024 நாடாளுமன்றத் தேர்தலை இந்தியா கூட்டணி எதிர்கொள்கிறது. இந்தியா கூட்டணிக்கு எதிராக அரசியல் செய்ய நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறப் போவதில்லை.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டமும் சமூக நலத்திட்டங்கள் தான். எதிர்கால தலைமுறை ஆரோக்கியமாக இருக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் காலை உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரு சமுதாயத்தை மற்றொரு சமுதாயத்திற்கு எதிராக நிறுத்தி ஆதாயம் தேடும் அரசியலை விரும்புவதில்லை. முறைகேடு புகார்களை திசைத் திருப்ப அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை சர்ச்சையாக்கி உள்ளது பா.ஜ.க.
கர்பா நடனம் ஆடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு!
இந்தி உட்பட எந்த மொழிக்கும் தி.மு.க. எதிரானது இல்லை; இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.