Homeசெய்திகள்தமிழ்நாடுதேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

 

தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: TN Govt

77-வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னையில் தேசியக் கொடியை ஏற்றினார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி!

சென்னையில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக் கம்பத்தில் மூவர்ணக் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். முன்னதாக, கோட்டை கொத்தளத்தில் கொடியேற்ற வருகைத் தந்த முதலமைச்சருக்கு காவல்துறை அணி வகுப்பு மரியாதைத் தரப்பட்டது. காவல்துறையின் பல்வேறு படையினரின் அணி வகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து, உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, அப்துல்கலாம் விருது உள்ளிட்ட விருதுகளையும், காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்களையும் வழங்கினார்.

சென்னையில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை அடுத்து பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

“சீர்திருத்தம், செயல்திறன், மாற்றமே தாரக மந்திரம்”- சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரை!

சுதந்திர தின விழாவில், சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் இ.கா.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

MUST READ