Homeசெய்திகள்தமிழ்நாடுசூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் தாயகம் வருகை

சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் தாயகம் வருகை

-

- Advertisement -
சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் தாயகம் வருகை
சூடானில் இருந்து மீட்கப்பட்ட 9 தமிழர்கள் சென்னை மற்றும் மதுரை வந்து சேர்ந்தனர். தங்களை மீட்க உறுதுணையாக இருந்த தமிழ்நாடு அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் தாயகம் வருகை

சூடானில் உள்நாட்டு போர் தீவிரமடைந்திருப்பதால் அங்கு சிக்கி இருக்கும் இந்தியர்கள் ஆபரேஷன் காவிரி திட்டத்தின் கீழ் மீட்கப்பட்டு வருகின்றனர். முதல் கட்டமாக 551 பேர் சூடானிலிருந்து ஐ.என்.எஸ். சுமேதா கப்பல் மற்றும் விமான மூலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.

ஜெட்டா விமான நிலையத்திலிருந்து 360 இந்தியர்களை ஏற்றுக்கொண்டு புறப்பட்ட தனி விமானம் நேற்று இரவு டெல்லி வந்தடைந்தது.

சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் தாயகம் வருகை

முதல் கட்டமாக அழைத்துவரப்பட்ட இந்தியர்களில் 9 தமிழர்கள் இடம் பெற்றிருந்தனர். சென்னையை சேர்ந்த ஐந்து பேரும் மதுரையைச் சேர்ந்த 4 பெரும் இன்று காலை டெல்லியில் இருந்த புறப்பட்டு தங்கள் ஊர்களுக்கு வந்து சேர்ந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழர்கள் சூடானில் கடந்த 15 நாட்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாக தெரிவித்தனர்.

சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் தாயகம் வருகை

தமிழர்களை தாயகம் அழைத்துவரும் செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுள்ளது. சென்னை வந்து சேர்ந்த தமிழர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்படுவர் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சூடானில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 12 தமிழர்கள் மும்பையில் இருந்து சென்னை வரை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ