சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு செப்டம்பர் 1 முதல் புதிய விமான சேவையை தொடங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தற்போது காலை நேரத்தில் மட்டும் அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் சேவையை வழங்கி வருகிறது. இதனால் யாழ்ப்பாணத்திற்கு கூடுதல் விமான சேவை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவையை தொடங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை விமான நிலையத்தில் பகல் 1.15 மணிக்கு புறப்படும் இண்டிகோ விமானம், மாலை 3.10 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில் மாலை 3.55 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு சென்னை வந்தடையும். இதற்கான பயண கட்டணமாக 7,604 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.