Homeசெய்திகள்தமிழ்நாடுகோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் - ரசிகர்கள் கொண்டாட்டம்

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்

-

கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் - ரசிகர்கள் கொண்டாட்டம்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்து இருந்தார்.

அதன்படி, கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் - ரசிகர்கள் கொண்டாட்டம்

முதற்கட்டமாக கோவை ஒண்டிப்புதூர், எல் அண்ட்டி நெடுஞ்சாலை, பாரதியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள இடம், சிறை மைதானம் ஆகிய 4 இடங்கள் கண்டறியப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் - ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது.

முன்னதாக, சட்டப்பேரவையில் பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னைக்கு அடுத்தபடியாக, கோவையில் பன்னாட்டு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கான பணிகள் இந்தாண்டில் தொடங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். அந்த செய்தியினால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

MUST READ