சான்பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர் சந்திப்பில் இன்று உரை நிகழ்த்துகிறார் தமிழ்நாடு முதலமைச்சர்.
சான்பிரான்சிஸ்கோசிஸ்கோ மற்றும் சிகாகோ ஆகிய நகரங்களுக்கு 19 நாள் அரசுமுறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு 10.17 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் சென்றார்.
பல்வேறு முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டை 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் நம்முடைய இலக்கு விரைவாக எட்டப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா சென்றடைந்தார். அங்கு முதல்வருக்கு தொழில் துறை அமைச்சர் டி.ஆர். பி ராஜா மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் தொடர்ச்சியாக சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்று முதலமைச்சர் இன்று உரையாற்றுகிறார்.
31ம் தேதி புலம்பெயர்ந்த தமிழர்களை சந்தித்து பேசும் முதலமைச்சர் செப்டம்பர் 2ம் தேதி சான்பிரான்ஸ்கோவில் இருந்து சிகாகோ செல்ல இருக்கிறார். அங்கு 10 நாட்கள் முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்து தொழில் தொடங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுகிறார்.
அமெரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு செப்டம்பர் 14ம் தேதி சென்னை திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.