தமிழ்நாட்டில் 31 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் என 48 பேரை பணியிட மாற்றம் செய்தும், இதில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி உயர்வு வழங்கியும் தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இருவருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு
அதன்படி, ராமநாதபுரம் காவல்துறை எஸ்.பி. தங்கதுறை, கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எஸ்.பி.யாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட காவல்துறை எஸ்.பி. சிவபிரசாத், தேனி மாவட்ட காவல்துறை எஸ்.பி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்ட காவல்துறை எஸ்.பி. டோங்கரே பிரவீன் ரமேஷ், மதுரை மாவட்ட காவல்துறை எஸ்.பி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை எஸ்.பி. சுதாகர், சென்னை பரங்கிமலை காவல் துணை ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பரங்கிமலை காவல் துணை ஆணையர் தீபக், விழுப்புரம் மாவட்ட காவல்துறை எஸ்.பி.யாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை எஸ்.பி. ஷஷாங்க் சாய், சென்னை கியூ பிரிவு சி.ஐ.டி. எஸ்.பி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட காவல்துறை எஸ்.பி. ஆக பெரோஸ்கான் அப்துல்லா, விருதுநகர் மாவட்ட காவல்துறை எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை வடக்கு துணை ஆணையர் சந்தீஷ், ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை எஸ்.பி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மாலை 4 மணி வரை 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
16 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி., ஐ.ஜி, ஏ.டி.ஜி.பி. ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.