Homeசெய்திகள்தமிழ்நாடுஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

-

 

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
Photo: TN Govt

தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 27 பேரை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, மூன்று டி.ஜி.பி.க்கள், மூன்று ஏ.டி.ஜி.பி.க்கள், 13 டி.ஐ.ஜி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி!

அதன்படி, முன்னாள் அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகளின் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளைக் கையாண்டு வரும் வன்னிய பெருமாள், குடிமைப் பொருள் சி.ஐ.டி. பிரிவு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். கொடநாடு வழக்குகளை விசாரித்து வந்த மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், சென்னை போக்குவரத்துக் கூடுதல் ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை போக்குவரத்துக் கூடுதல் ஆணையராக பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்த கபில்குமார் சரத்கர் சென்னை காவல் ஆணையரகத்தின் தலைமையகக் கூடுதல் ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தெற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த அஸ்ரா கார்க், சென்னை வடக்கு கூடுதல் ஆணையராகவும், பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள், சென்னை தலைமையிட ஆணையராகவும், சென்னை தலைமையிடக் கூடுதல் ஆணையர் லோகநாதன், மதுரை மாவட்ட காவல் ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

“சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறுகிறேன்”- இங்கிலாந்து அணியின் வீரர் அறிவிப்பு!

காவல்துறை நவீன மயமாக்கல் பிரிவு ஐ.ஜி. சந்தோஷ் குமார், லஞ்ச ஒழிப்புத்துறை இணை ஆணையராகவும், வடக்கு மண்டல இணை ஆணையராக இருந்த ரம்யா பாரதி, மதுரை டி.ஐ.ஜி.யாகவும், வடக்கு மண்டல இணை ஆணையராக சாமுண்டேஸ்வரியும், மேற்கு மண்டல ஐ.ஜி.யாக பவனீஸ்வரியும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

MUST READ