Homeசெய்திகள்தமிழ்நாடுஇரா. நல்லகண்ணுவின் 100வது ஆண்டு பிறந்த நாள் - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்...

இரா. நல்லகண்ணுவின் 100வது ஆண்டு பிறந்த நாள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் எக்ஸ் பதிவு

-

- Advertisement -

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தமிழக அரசியல் வரலாற்றில் முதுபெரும் தலைவர் இரா. நல்லகண்ணுவுக்கு இன்று (டிசம்பர் 26) 100வது ஆண்டு பிறந்த நாள்.

இரா. நல்லகண்ணுவின் 100வது ஆண்டு பிறந்த நாள் - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் எக்ஸ் பதிவுஇதையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர்  கமல் ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் ,
”நூறாண்டு காணும் தொண்டு.

எல்லோரும் சமமென்னும் காலம் வரவேண்டும்; நல்லோர் பெரியர் என்னும் காலம் வரவேண்டும் என்பது பாரதியின் கனவு. அதன் நனவான வடிவமே மாபெரும் தோழர் நல்லகண்ணு அவர்களின் வாழ்வு.

சமூகத்தில் சமத்துவம் நிலவவேண்டும் என்பதற்காகவே தன் வாழ்நாள் மொத்தத்தையும் அர்ப்பணித்து, அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான போர்க்களத்தில் முன்னின்று வாழ்ந்துகாட்டிக்கொண்டிருக்கிறார் ஐயா.

இப்படி ஒருவர் இருக்க இயலுமா என்று வியக்கும் வண்ணம் தன் வாழ்வை அமைத்துக்கொண்ட பெருந்தகை தோழர் நல்லகண்ணு எளியோரின் வாழ்த்துப்படி நூறாண்டு காண்கிறார்.” என பதிவிட்டுள்ளார்.

2025 கோடையில் வெளியாகும் நான்கு பெரிய ஹீரோக்களின் படங்கள்!

MUST READ