Homeசெய்திகள்தமிழ்நாடுமாநிலக் கல்லூரி மாணவர்களிடையே இறையன்பு கலந்துரையாடல்

மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே இறையன்பு கலந்துரையாடல்

-

கல்லூரிக்கு கூட்டுப்புழுவாக வரும் நீங்கள் வெளியே செல்லும் போது சிறகடித்து பறக்கும் பட்டாம்பூச்சியாக இருக்க வேண்டும் என கல்லூரி மாணவர்களிடையே இறையன்பு பேசியுள்ளார்.

மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே இறையன்பு கலந்துரையாடல்

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களின் அறிமுக நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு கலந்துகொண்டு மாணவர்கள் முன்னிலையில் சிறப்புரையாற்றினார்.

அப்பொழுது அவர் இணையத்தின் மூலம் படிக்கிற வசதி வந்து விட்டது. வீட்டிலேயே கணினியில் வாசிக்கின்ற பழக்கம் பல நாடுகளில் இருக்கின்றது. நாமும் கணினியை வைத்துக் கொண்டு கல்வியைப் பெற முடியும் என்றால் அந்த கல்வி முழுமையாக இருக்காது.

படிக்கும் உங்களுக்கு நிறைய பொறுப்பு இருக்கிறது. படிக்காதவர்கள் எல்லாம் சாதிக்கவில்லையா என்பார்கள். ஆனால் அது தற்போது பொருந்தாது. முறையாக கல்லூரிக்கு சென்று படிக்கும் போதுதான் அறிவு செறிவு பெறுகிறது. ஒரு இல்லம் கல்லூரியின் கட்டமைப்புக்கு ஈடாகவே முடியாது. எவ்வளவு உயரம் ஏறுகிறீர்களோ அவ்வளவு சுவையான பழங்களை பறிக்கலாம்.

கொரோனா காலத்தில் கைபேசியிலேயே மாணவர்களை படிக்கச்சொல்லி வற்புறுத்தினர். பிறகு அவர்களின் கையில் ஒரு பகுதியாகவே கைபேசி ஆகிவிட்டது.

கல்லூரியில் மொழி ஆளுமை வளர்த்துக்கொள்ள வேண்டும். நிறைய வாசியுங்கள் இங்கே கற்றால்தான் நிறைய தேர்வுகளை எதிர்கொள்ள முடியும். கல்லூரிக்குள் நுழைந்து விட்டால் பள்ளி நினைவில் இருந்து வெளியே வந்து முதிர்ச்சியடைந்த நிலையில் இருக்க வேண்டும்.

மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே இறையன்பு கலந்துரையாடல்

மாணவர்களுக்கு முக்கியம் சுய கட்டுப்பாடு. நம்மை நாமே நிர்வகித்துக்கொள்ள வேண்டும். அடுத்தவர்களுக்காக நம்மை நாம் செதுக்கிக்கொள்ளாமால்.. நமக்காக நாம் செதுக்கிக்கொள்ள வேண்டும். எந்த துறைக்கு செல்ல வேண்டும் என்பதை முடிவெடுத்து ஒவ்வொரு அடியையும் ஆழமாக வைத்து முன்னேற வேண்டும்.

மாநிலக் கல்லூரியின் நூலகம் மகத்தானவர்களை உருவாக்கிய நூலகம். வாசிப்பை மேற்கொள்ளுங்கள். கவிதை, கட்டுரை எழுதி அறிவை விசாலம் செய்யுங்கள்.

கூட்டுப்புழுவாக வரும் நீங்கள் வெளியே செல்லும் போது சிறகடித்து பறக்கும் பட்டாம்பூச்சியாக இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு இறையன்பு பதிலளித்தார்.

மாணவர் கேள்வி – இளம் எழுத்தார்களுக்கு சொல்ல விரும்புவது?

நிறைய வாசியுங்கள், எழுதுங்கள். முதலில் நடக்க பழகும் குழந்தையாக இருந்தாலும் பிறகு ஒலிம்பிக் ஓட்டம் போல் ஆகிவிடும்.

மாணவி கேள்வி – உங்கள் ரோல் மாடல் யார்?

ஒருவரை மட்டும் ரோல் மாடலாக சொல்ல முடியாது. பலரிடம் இருந்து பல விசியங்களை கற்றுக்கொண்டு உள்ளேன். ஆசிரியர்கள் மட்டும் அல்ல.. மரம், செடி உயிரற்றவைகளிடம் இருந்தும் கூட கற்றுக்கொண்டு உள்ளேன். தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கிறேன்.

மாணவி கேள்வி – நான் தமிழ் வழியில் படித்தேன்… யு.பி.எஸ்.சி. ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டுமா?

வருமான வரி பிடித்தத்தை திரும்ப பெறுவது எப்படி?

ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. தமிழிலும் எழுதலாம். 100 நாட்கள் ஆங்கிலத்தில் பேசுவது, செய்திதாள் படிப்பது, நூல் படிப்பது என்று இருந்தால் 101 வது நாள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம்.

மாணவி கேள்வி – ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்பது சிறுவயது கனவா?

எனக்கு குழந்தை பருவத்தில் எந்த கனவும் இருந்தது இல்லை. விளையாட வேண்டும்.. திண்பண்டம் சாப்பிட வேண்டும் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது

மாணவி கேள்வி – அதிகாரியாக நீங்கள் பெருமைபடும் வகையில் செய்த ஒரு திட்டம்?

தமிழகத்தில் தண்டோராவை ஒழித்து விட்டு தகவல் தொடர்பு கருவிகளை கொண்டு வந்ததற்கு பெருமை படுகிறேன். இவ்வாறு இறையன்பு மாணவர்களிடையே கலந்துரையாடினார்.

MUST READ