Homeசெய்திகள்தமிழ்நாடுரேஷன் கடைகளில் விரைவில் கண் கருவிழி சரிபார்ப்பு - அமைச்சர் சக்கரபாணி

ரேஷன் கடைகளில் விரைவில் கண் கருவிழி சரிபார்ப்பு – அமைச்சர் சக்கரபாணி

-

ரேஷன் கடைகளில் விரைவில் கண் கருவிழி சரிபார்ப்பு  - அமைச்சர் சக்கரபாணி

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில் கண் கருவிழி சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்றது. விவாதத்திற்கு பிறகு, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி பேசுகையில், “தி.மு.க. அரசு ஆட்சி பொற்றது முதல் தற்போது வரை 15,79,393 ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. பெறப்பட்ட 2,92,043 விண்ணப்பங்களில் 9,784 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, ஆதார் எண்ணுடன் சரிபார்க்கப்பட்டு ரேஷன் அட்டைகள் அச்சிடும் நிலையில் உள்ளன. மீதமுள்ள ரேஷன் அட்டைகள் பரிசீலித்து ஆய்வு செய்து தகுதியுள்ள நபர்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்படும்.

சென்னையில் பதுங்கி இருந்த பயங்கரவாதி கைது

கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் தற்போது 9,182 ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து கடைகளிலும் கண் கருவிழி சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்படும். மேலும் மே, ஜூன் மாத துவரம் பருப்பு, பாமாயில் முழுமையாக வழங்கப்படும் என பேசியுள்ளார்.

MUST READ