Homeசெய்திகள்தமிழ்நாடுஉலகத்தரத்தில் கல்வியை மேம்படுத்தாமல் இந்தியை திணிப்பது அவசியமா? - ஜெயபிரகாஷ் காந்தி கண்டனம்

உலகத்தரத்தில் கல்வியை மேம்படுத்தாமல் இந்தியை திணிப்பது அவசியமா? – ஜெயபிரகாஷ் காந்தி கண்டனம்

-

- Advertisement -

டைம்ஸ் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 200 இடங்களுக்குள் ஒரு இந்திய கல்வி நிறுவனம் கூட இடம்பெறமுடியவில்லை. 200-300 ரேங்க் பட்டியலில் 4 நிறுவனங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. உலகத்தரத்தில் கல்வியை மேம்படுத்திவதற்கு பதிலாக புதிய கல்விக் கொள்கையும், இந்தி திணிப்பும் அவசியம் தானா? கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளாா். உலகத்தரத்தில் கல்வியை மேம்படுத்தாமல் இந்தியை திணிப்பது அவசியமா? - ஜெயபிரகாஷ் காந்தி கண்டனம்மேலும் இது குறித்து அவர், சமீபத்தில் வெளியிடப்பட்ட டைம்ஸ் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 200 இடங்களில் ஒரு கல்வி நிறுவனம் கூட இல்லை ,ஒரு ஐ.ஐ.டி கூட 200 இடங்களுக்குள் இடம்பெற முடியவில்லை. 200-300 இடங்களில் 4 நிறுவனங்கள் மட்டுமே!

நிறைய விஷயங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. ஆராய்ச்சியில் பின் தங்கியுள்ளோம். செய்ற்கை நுண்ணறிவில் அமெரிக்கா, சீனாவை விட மிகவும் பின் தங்கியுள்ளோம். இதற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆய்வு செய்ய வேண்டிய நிலையில், இரு மொழிக் கொள்கையா, மும்மொழிக் கொள்கையா என்ற விவாதங்கள் அவசியமற்றது.

மொழியை திணிக்கக் கூடாது, மாணவர்களின் விருப்பத்திற்கு தான் விடவேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக கல்வியில் அரசியல் தலையீடுகள் மிகவும் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.

தர்மேந்திர பிரதான் சர்வாதிகாரப் பேச்சு: ஐபெட்டோ அகில இந்திய அமைப்பு கடும் கண்டனம்..!

MUST READ