ஐ.நா. தீர்மானத்துக்கு மதிப்பளித்து இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
‘அயோத்தி ராமர்கோயில்’- காங்கிரஸ் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!
இது குறித்து தொல்.திருமாவளவன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய நாடுகளின் பொது மன்றம் வெள்ளிக்கிழமையன்று நிறைவேற்றிய தீர்மானத்தில், ’இஸ்ரேலியப் படைகளுக்கும், காசாவில் உள்ள ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே “உடனடியான, நீடித்த மனிதாபிமான அடிப்படையிலான போர்நிறுத்தத்திற்கு” அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தரைப்படை தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதாக செய்திகள் கூறுவதால், காஸாவில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கு உயிர்காக்கும் பொருட்கள் மற்றும் மருத்துவ சேவைகளை “தொடர்ச்சியாகவும், போதுமான அளவிலும், தடையின்றியும்” வழங்க வேண்டும் என்றும் ஐநா தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.
‘மனிதாபிமான அடிப்படையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும்; பணயக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்; காஸாவில் உள்ள மக்களின் தேவைகளுக்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்பட வேண்டும். பேரழிவு நம் கண்களுக்கு முன்னால் விரிந்து கொண்டிருக்கிறது” என ஐ.நா. பொதுச் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.
ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை 120 நாடுகள் ஆதரித்து வாக்களித்த நிலையில் இந்தியா அந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்திருப்பது வரலாற்றுப் பிழையாகும். பா.ஜ.க. அரசின் இந்தச் செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம்.
ஒருபுறம் பாலஸ்தீனத்தை ஆதரித்துக்கொண்டு இன்னொருபுறம் இஸ்ரேல் தொடுத்துள்ள போரையும் மறைமுகமாக ஆதரிப்பது இந்தியாவின் நன்மதிப்பை உலக அரங்கில் கெடுப்பதாக உள்ளது. இது இந்திய அரசின்மீது களங்கத்தை ஏற்படுத்தும் கறையாகப் படிந்துள்ளது.
கேரளாவில் குண்டுவெடிப்பு- ஒருவர் பலி!
காஸா மீதான தாக்குதல் உச்ச கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், இப்போதாவது இந்திய அரசு போர் நிறுத்தத்தை வலியுறுத்திக் குரலெழுப்ப வேண்டும். ‘ஐ.நா. பொதுமன்றத்தின் தீர்மானத்துக்கு மதிப்பளித்துப் போர் நிறுத்தம் செய்யவேண்டும்’ என இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு தனது அறிக்கையில் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.