Homeசெய்திகள்தமிழ்நாடுஇஸ்ரோ ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மறைவு - டிடிவி தினகரன் இரங்கல்..

இஸ்ரோ ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மறைவு – டிடிவி தினகரன் இரங்கல்..

-

தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோவின் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மாரடைப்பால் காலமான செய்தி வருத்தத்தையும் வேதனையையும் தருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில், ராக்கெட் ஏவும் நிகழ்வுகளை அறிவிக்கும் ரேஞ்ச் ஸ்பீக்கராக பணியாற்றி வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த வளர்மதி(50). கம்பீரமான குரல் மற்றும் அழகான உச்சரிப்புகளால் பாராட்டுக்களை பெற்றுவந்த வளர்மதிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

இஸ்ரோ ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி

 

அந்தவகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோவின் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மாரடைப்பால் காலமான செய்தி வருத்தத்தையும் வேதனையையும் தருகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்மையில் இந்தியாவின் பெருமையை உலகுக்கு உணர்த்திய சந்திராயன்-3 விண்கலம் உட்பட கடந்த பல ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய முக்கிய ராக்கெட்கள் ஏவுதலின் போது ஒலித்த விஞ்ஞானி வளர்மதியின் குரலை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. விண்வெளித்துறையில் இந்தியாவின் வளர்ச்சி இன்று பெருமளவு உயர காரணமான பெண் விஞ்ஞானிகளில் ஒருவரான வளர்மதியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

MUST READ