Homeசெய்திகள்தமிழ்நாடுநாம் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைப்பது தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேலை - எடப்பாடி பழனிசாமி...

நாம் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைப்பது தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேலை – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

-

நாம் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைப்பது தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேலை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேச்சேரி எம். காளிப்பட்டியில் விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவிரி – சரபங்கா வெள்ள உபரிநீர் திட்டத்தை கொண்டுவந்த அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது: 565 கோடி ரூபாய் மதிப்பில் மேட்டூர் உபரிநீரை எடுத்து 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை கொண்டுவந்து, நானே துவக்கி வைத்தேன். 04/03/2020 பூமி பூஜை போடப்பட்டு 26/02/2021ல் ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டது. அண்ணா திமுக ஆட்சி காலத்தில் எழுபது சதவீத பணி நிறைவேற்றப்பட்டது, எஞ்சிய 30 சதவீத பணிகள் மட்டும் இருந்தது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அவர்கள் திட்டத்தை துரிதமாக செயல்படுத்தி இருந்தால் ஓராண்டிலேயே செயல்படுத்தி இருக்கலாம். ஆனால் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டம் என்பதால் காலதாமதம் செய்து வருகின்றனர்.

edappadi palanisamy

திமுக ஆட்சி அமைந்த உடன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இந்த திட்டம் குறித்து பார்வையிட்டார். அப்போது நல்ல திட்டம் இது உடனடியாக நிறை வேற்றப்படும் என்று கூறிச்சென்றார். நானும் சட்டமன்றத்தில் இது குறித்து பேசினேன் ஆனால் சுமார் 4 வருடம் ஆகும் நிலையில் இன்னும் திட்டத்தை நிறைவேற்றவில்லை, ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி, இது விவசாயிகளுக்கான திட்டம். இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றும்பொழுது, நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் விவசாயிகள் பயனடைவார்கள். இது அனைவருக்கும் ஒரு பொதுவான திட்டம்.  எடப்பாடி, ஓமலூர், மேட்டூர் ஆகிய சட்டமன்றத் தொகுதியில் உள்ள பகுதிகள் செழிப்போடு இருக்க வேண்டும், விவசாயிகள் வாழ வேண்டும், குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற பாடுபட்டோம்.

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர்; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் எங்கெங்கெல்லாம் விவசாயிகள் பாதிக்கப் படுகிறார்களோ அங்கெல்லாம் நீருக்கான திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. இதேபோல அத்திக்கடிவு – அவினாசி திட்டத்தை கொண்டுவந்தேன். திட்டம் பூமி பூஜை போட்டு தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது திமுக ஆட்சியை நான்காண்டு காலம் பாகங்களில் இன்னும் அந்த திட்டம் முடிவு பெறவில்லை. விவசாயிகளுக்காக போடப்பட்டுள்ள திட்டத்தை குறித்த காலத்தில் போடப்பட்டால் தான், விவசாயிகள் பயனடைவார்கள். விவசாயின் உள்ளத்தில் என்ன இருப்பது என்பதை அறிந்து, அதற்கு ஏற்ப ஆட்சி நடத்த வேண்டும். திமுக அரசின் நினைத்திருந்தால் ஒரே ஆண்டில் 100 ஏரிக்கு நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம், ஆனால் இதுவரை 46 ஏரிகள் தான் நிரப்பப்பட்டுள்ளன. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும், இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.

அதிமுக ஆட்சியில் தான் நீர்மேலாண்மை திட்டத்திற்கு ஒரு நல்ல வடிவமைப்பு கொடுக்கப்பட்டது. எங்கெல்லாம் உபரிநீர் வெளியேறி கடலில் கலக்கிறதோ, அங்கெல்லாம் தண்ணீரை சேமிக்க தடுப்பணைகள் கட்டப்பட்டது. இந்த அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு விவசாயிகளுக்கு அநீதி இழைத்து வருகிறது. 425 கோடியில் காவிரியில் ஒரு தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுத்தோம். காவிரி மேலாண்மை திட்டத்தில் அதிமுக ஆட்சியில் தான் நல்ல தீர்ப்பை பெற்றுத் தந்தோம்.

மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் – டாக்டர் இராமதாஸ் வேண்டுகோள்!

நாம் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைப்பது தான் முதலமைச்சரின் ஸ்டாலின் வேலை.
பெரும்பாலான திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதை மக்கள் அறிய வேண்டும். கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் என என்னுடைய ஆட்சியில் நடவடிக்கைகள் எடுத்தேன். பிரதமர் மோடியை சந்தித்து இது குறித்து வலியுறுத்தினேன். பிரதமர் அவர்கள் இதற்கு இசைவு தந்தார். இதனை அடுத்து தெலுங்கானா முதலமைச்சரை சந்தித்து இந்த திட்டத்திற்கு ஆதரவு கேட்டோம். அதேபோல ஆந்திரா முதலமைச்சரை சந்தித்தும் ஆதரவு கேட்டோம். ஆனால் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இந்த மத்திய அரசும் மற்ற 2 மாநில அரசும் ஆதரவு கொடுத்த நிலையில், திமுக அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. 2026இல் அதிமுக ஆட்சி மலரும், அப்போது கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும்.

இலவசமாக வண்டல்மண் அள்ள அனுமதி தந்தோம். குடிமராமத்து திட்டத்திற்காக 1440 கோடி நிதி உதவி செய்து ஏரிகளை தூர்வாரினோம். மாபெரும் நதிநீர் மூலமாக தான் டெல்டா விவசாயிகள் அதிகமாக நெல்லை விளைவித்து வினியோகம் செய்து வருகின்றனர். ஆனால் திமுக ஆட்சியை டெல்டா பகுதி பாலைவனமாக மாறி வருகிறது. ஆனால் என்னுடைய ஆட்சியில், டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தேன். என்னுடைய ஆட்சி காலத்தில் 2447 கோடி விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக வழங்கினேன்.

"இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்?"- எடப்பாடி பழனிசாமி கேள்வி!

மக்காச்சோளம் பயிர்களை அமெரிக்கன் படைப்புழு அழித்துக்கொண்டிருந்தபோது பூச்சி மருந்து மூலம் காப்பாற்றினோம். அதேபோல மரவள்ளி கிழங்கில் மாவு பூச்சி சேதம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுத்தோம். விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கிய அரசு அதிமுக அரசு தான். உழவன் செயலி என்ற திட்டத்தை கொண்டு உழவர்கள் பல்வேறு நன்மைகளை செய்தோம். 12,110 கோடி ரூபாய் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்தோம். தற்போது டெல்டா மாவட்டத்தில் உரம் கிடைக்கவில்லை. குருவை சாகுபடி செய்து விவசாயிகள் 2 லட்சம் ஏக்கரில் பாதிப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு இந்த அரசு எதையும் செய்யவில்லை்.

உதயநிதி துணை முதல்வராவதற்கு தகுதியுடையவர் : அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

விவசாயிகளின் பிரச்சனைகளை தெரியாத முதலமைச்சர் ஸ்டாலின். அரசாங்கத்தின் பணம், மக்களுடைய பணம், ஏன்? பேனா வைக்க 82 கோடி மதிப்பில் இந்த பணத்தை செலவிடுகிறீர்கள். இது மக்களின் பணம். தற்போது கார் பந்தயம் தேவையா? இங்குள்ள மக்கள் பலருக்கு காலில் செருப்பு கூட இல்லை. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் உதயநிதி. அவர் எனக்கு அறிவுரை சொல்லத் தேவையில்லை. கிளைக் கழக பொறுப்பில் இருந்து நான் வளர்ந்தவன். என்னுடைய பணியை பார்த்துதான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நெடுஞ்சாலை துறையுடன், பொதுப்பணி துறையையும் எனக்கு வழங்கினார். நான் உழைப்பால் உயர்ந்திருக்கிறேன். எனவே வேண்டுமென்று எப்பொழுது பார்த்தாலும் எங்களை விமர்சனம் செய்தால், அதற்கு தக்க பதிலடி கொடுப்போம்.

பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்துக்கொள்ளும் என உதயநிதி கூறி வருகிறார்.
ஆனால் அவர்கள்தான் பாஜகவோடு மறைமுக கூட்டணி வைத்துள்ளனர், ரெய்டு வந்துவிடும் என்ற பயத்தில் இவ்வாறு செய்து வருகின்றனர். ஆனால் அதிமுக அவ்வாரல்ல, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ