Homeசெய்திகள்தமிழ்நாடுபொதுக்குழுவில் காரசார விவாதம் நடைபெறுவது சகஜம்தான்... அன்புமணி ராமதாஸ் விளக்கம்!

பொதுக்குழுவில் காரசார விவாதம் நடைபெறுவது சகஜம்தான்… அன்புமணி ராமதாஸ் விளக்கம்!

-

- Advertisement -

பாமக பொதுக்குழுவில் நடைபெற்ற வார்த்தை மோதலை தொடர்ந்து தைலாபுரம் இல்லத்தில் மருத்துவர் ராமதாசை, அன்புமணி ராமதாஸ் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மூத்த மகளான காந்திமதியின் மகனான, முகுந்தனை மாநில இளைஞர் சங்க தலைவராக நியமிப்பதாக அறிவித்தார். இதற்கு அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார்.  இதனால் போபமடைந்த ராமதாஸ் தான் சொல்பவர்கள் தான் கட்சியில் இருக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கட்சியை விட்டு போங்க என தெரிவித்தார். அப்போது, அன்புமணி ராமதாஸ் சென்னை பனையூரில் தனக்கு ஒரு அலுவலகம் வைத்துள்ளதாகவும், அங்கே தன்னை வந்து பார்க்கலாம் என கூறி செல்போன் எண்ணை மேடையிலேயே கூறினார். இதனால் பாமகவில் பிளவு ஏற்பட்டுவிட்டதாகவும், இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக இருந்த மோதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை, அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ், கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் இன்று நேரில் சந்தித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.  தந்தை ராமதாஸ் உடன் சந்திப்பு முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ்,  பா.ம.க. ஒரு ஜனநாயக கட்சி என்றும், கட்சி பொதுக்குழு கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெறுவது சகஜம்தான் என்றும் தெரிவித்தார். ஐயா மருத்துவர் ராமதாஸ் எப்போதும் தங்களுக்கு ஐயாதான் என்றும் அன்புமணி திட்டவட்டமாக கூறினார்.

மேலும், பா.ம.க.வின் உட்கட்சி பிரச்சினையை தாங்கள் பார்த்துக்கொள்வதாகவும், பா.ம.க.வின் உட்கட்சி பிரச்சினைகள் குறித்து மற்றவர்கள் பேசக்கூடாது என்றும் தெரிவித்தார். மேலும், மருத்துவர் ராமதாஸ் உடனான சந்திப்பின்போது, கட்சியின் வளர்ச்சி, சட்டமன்றத் தேர்தல், சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்டவை குறித்து பேசியதாகவும் அன்புமணி தெரிவித்தார்.

MUST READ