Homeசெய்திகள்தமிழ்நாடுசினிமா புகழை வைத்து அரசியலில் ஜெயித்துவிடலாம் என எண்ணுவது தவறு - ஹெச்.ராஜா 

சினிமா புகழை வைத்து அரசியலில் ஜெயித்துவிடலாம் என எண்ணுவது தவறு – ஹெச்.ராஜா 

-

- Advertisement -

சினிமாவில் புகழ் பெற்றிருப்பதை வைத்து அரசியலில் ஜெயித்துவிடலாம் என எண்ணுவது தவறு என்று தமிழக பாஜக பொறுப்பாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் அருகில் உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் தமிழக பாஜக பொறுப்பாளர் எச்.ராஜா இன்று தனது குடும்பத்தினருடன் வழிபாடு நடத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, அரசியலில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு என்னும் நிலைப்பாடு பாஜக முன்பிருந்தே செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

விஜய் நடிக்கும் 'தி கோட்' படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?

சினிமாவில் உச்சபட்ச புகழ் பெற்றதால் அதனை வைத்துக்கொண்டு அரசியலில் சாதித்து விடலாம் என எண்ணுவது தவறு என்று குறிப்பிட்ட ஹெச்.ராஜா, சினிமாவில் மிகப்பெரிய நடிகனாக இருந்த சிவாஜி கணேசன் முதல் சமீபத்தில் உயிரிழந்த விஜயகாந்த் வரை அரசியலில் பெரிய மாற்றம் கொண்டு வர முடியவில்லை என்றும் ஹெச்.ராஜா சுட்டிக்காட்டினார்.

தேர்தலில் போட்டியிட்ட கூட்டணி கட்சியினருக்கு ராஜ்ய சபா சீட்டு வழங்கி மந்திரி சபையில் இடம் அளிக்க வாய்ப்பு உள்ளதா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஹெச்.ராஜா, அதனை பிரதமர் மோடி தான் முடிவு செய்வார் என்று கூறினார்.

MUST READ