- Advertisement -
திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு
மாமல்லபுரத்தில் அரக்கோணம் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான தனியார் நட்சத்திர விடுதியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
தமிழக முழுவதும் அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கால்டன் சொகுசு நட்சத்திர விடுதியில் வருமான வரித்துறையினர் 10 பேர் கொண்ட குழுவினர் சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது. வீடு, அலுவலகங்கள் உட்பட 40 இடங்களில் சோதனை நடத்திவருவதாக தெரிகிறது. இதேபோல் சவீதா மருத்துவக் கல்லூரியில் அதிகளவு வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் ஐடி சோதனை நடைபெற்றுவருகிறது.