அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய சுமார் 40- க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (மே 26) காலை 07.30 மணிக்கு அதிரடியாகத் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த காவல்துறை!
தமிழகத்தில் சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஹைதராபாத், பெங்களூரு, பாலக்காட்டிலும் அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. டாஸ்மாக் மற்றும் மின்துறை அரசு ஒப்பந்ததாரர்கள் அலுவலகம் மற்றும் இல்லங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூரில் மட்டும் அமைச்சரின் சகோதரர், நண்பரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கரூரில் உள்ள அமைச்சரின் சகோதரர் அசோக்கின் வீடு பூட்டியிருந்ததால், அங்கு சோதனையிட வந்த அதிகாரிகள் வெளியில் காத்திருந்த நிலையில், அவர்களை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ஐ.டி. கார்டைக் காட்ட சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பெண் அதிகாரியை வளைத்து தி.மு.க.வினர் கேள்வி மேல் கேள்வி கேட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. இதனிடையே, வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடியை தி.மு.க.வினர் உடைத்துள்ளனர்.
மத்தீஷா பதிரானாவின் குடும்பத்தினருடன் தோனி சந்திப்பு!
இது குறித்து விளக்கம் அளித்துள்ள கரூர் மாவட்ட காவல்துறை எஸ்.பி. சுந்தரவதனன், “கரூரில் வருமான வரித்துறை சோதனைக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் சி.ஆர்.பி.எஃப். வீரர்களையும், அழைத்து வரவில்லை. கார் கண்ணாடி உடைக்கப்பட்ட தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றுள்ளனர். மாவட்டத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் 9 இடங்களில் 200- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.