தமிழக அரசின் பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் செய்யப்படாததால் அதிருப்பதியில் ஜாக்டோ – ஜியோ அமைப்பின் மூத்த தலைவர் மாயவன் மாநிலம் முழுவதும் 6 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளாா்.
தமிழக அரசின் பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் (OPS) மீண்டும் அமல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்த போதிலும், எந்த அறிவிப்பும் செய்யப்படாததால் ஜாக்டோ – ஜியோ அமைப்பு கடும் அதிருப்தியடைந்துள்ளது. இதனால், அரசு மீது அழுத்தம் கொடுக்க, மார்ச் 23ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மாநில அரசுக்கு ஜாக்டோ – ஜியோ அமைப்பு மார்ச் 30ஆம் தேதி வரை நேரக்கெடு விதித்துள்ளது. இதுகுறித்து அமைப்பின் மூத்த தலைவர் மாயவன், “பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தோம், ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் 6 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை ஒன்றிணைத்து நடத்தவுள்ள இந்த போராட்டம், தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மார்ச் 30ஆம் தேதி நிலைமையை மதிப்பீடு செய்து அடுத்த கட்ட போராட்டத்தை முடிவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் இந்த 3 விஷயங்கள்! சொந்தமாக TN Railway! இந்தியா அலறப்போகும் 2000 ஏக்கர்!