Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுகவில் இருந்து ஜாபர் சாதிக் அதிரடி நீக்கம் - கட்சி தலைமை நடவடிக்கை!

திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் அதிரடி நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை!

-

திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

தலைநகர் டெல்லியில் நேற்று ஒரு கும்பலிடம் இருந்து அம்மாநில போலீசார் போதை பொருளை பறிமுதல் செய்தனர். டெல்லி போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில், திமுகவை சேர்ந்த சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக் இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்டது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி (Dismiss) வைக்கப்படுகிறார். இவரோடு கழகத்தினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ