போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றி வளைத்து கைது செய்தது காவல்துறை.
‘ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் பின்னணி’- விரிவான தகவல்!
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் தலைமறைவானார். அவரை காவல்துறையினர், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த சூழலில், ஜாபர் சாதிக் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க, அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், டெல்லியில் கைதான ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை மத்திய குற்றத்தடுப்பு பிரிவினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம்
சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் ஜாபர் சாதிக்கிற்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தகவல் கொடுத்ததுடன், அவருக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.