முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்துச் செய்த உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு விசாரணையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
“காவிரி பிரச்சனை- வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை”- காவல்துறை டி.ஜி.பி. எச்சரிக்கை!
கடந்த 1995- ஆம் ஆண்டு ஜெகத்ரட்சகன் தனது அதிகாரத்தின் மூலம் 170 ஏக்கர் நிலத்தை முறைகேடாக வாங்கி, அவற்றை விற்பனை செய்ததன் மூலம் 1,700 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாக தாவுசன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்த நிலையில், அந்த வழக்கை ரத்துச் செய்யக்கோரி ஜெகத்ரட்சகன் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த 2022- ஆம் ஆண்டு வழக்கை ரத்துச் செய்து உத்தரவிட்டது.
அதை எதிர்த்து, தாவுசன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதில், ஜெகத்ரட்சகன் மீதான மிகப்பெரும் குற்றச்சாட்டு மற்றும் ஆவண ஆதாரங்கள் இருந்தும் அதனை சென்னை உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ள தவறிவிட்டது என்றும், இந்த வழக்கை உடனடியாக விசாரித்து, உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
கன்னடர்கள் மீது எழுதிய மரண சாசனம்- முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ஆவேசம்!
இதுபோன்ற வழக்குகளால் தான் துன்புறுத்தப்படுவதாக ஜெகத்ரட்சகன் தரப்பில் வாதிடப்பட்ட நிலையில், வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிபதி கிருஷ்ணா முராரி ஒத்திவைத்தார்.