Homeசெய்திகள்தமிழ்நாடுஅரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகன் (திமுக) 4-வது முறையாக வெற்றி

அரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகன் (திமுக) 4-வது முறையாக வெற்றி

-

- Advertisement -

 

அரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகன் (திமுக) 4-வது முறையாக வெற்றி

2024 மக்களவை தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக ஜெகத்ரட்சகன் 4வது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார்.

ரக்கோணம் மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில் ஜெகத்ரட்சகன், அ.தி.மு.க-வில், பா.ஜ.க கூட்டணியில் ஏ.ல்.விஜயன் , பா.ம.க சார்பாக கே.பாலு, நாம் தமிழர் கட்சியில் ஷா.அப்சியா நஸ்ரின் ஆகியோர் போட்டியிட்டனர்.

வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடை பெற்றது.

அ.தி.மு.க 2-வது இடத்தையும், பா.ம.க 3-வது இடத்தையும், நாம் தமிழர் கட்சி 4-வது இடத்தை பிடித்திருக்கிறது. ஏறக்குறைய 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நான்காவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார் ஜெகத்ரட்சகன். நடைபெற்றது

இறுதிச்சுற்று முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை விவரம்

ஜெகத்ரட்சகன் (திமுக)             –     5,60,578

ஏ.ல்.விஜயன் (அதிமுக)               –     2,55,343

கே.பாலு (பாமக)                         –     2,00,614

ஷா.அப்சியா நஸ்ரின் (நாதக)      –     97,985

MUST READ