முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையில் 10 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய விளையாட்டு- இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய கிரிக்கெட் அணி!
ஜெகத்ரட்சகனின் அடையாறு இல்லத்தில் அக்டோபர் 05- ஆம் தேதி காலை 07.00 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வந்த சோதனை, இரவு 11.00 மணி வரை நீடித்தது. இரண்டு வாகனங்களில் வந்த அதிகாரிகள் மட்டும் ஜெகத்ரட்சகனின் வீட்டிலேயே தங்கி விட்டனர். மூன்று வாகனங்களில் வந்த அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.
இரண்டாவது நாளாக காலை 07.00 மணி முதல் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை தொடங்கியது. காலை 10.00 மணியளவில் மேலும் மூன்று வாகனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள், ஜெகத்ரட்சகனின் வீட்டிற்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சுப்மன் கில் பங்கேற்பதில் சிக்கல்!
அடையாறு கஸ்தூரி பாய் முதல் பிரதான தெருவில் தொடங்கி, இரண்டாவது தெரு வரை ஜெகத்ரட்சகனின் வீடு நீளமானது. எனவே இரண்டு பெண் அதிகாரிகள் மட்டும் அந்த வீட்டின் பின் பகுதிக்கு சென்று, அங்கிருந்த சுவர் மற்றும் சிறிய கதவினைத் தட்டிப் பார்த்து வீட்டில் ரகசிய அறை இருக்கிறதா என சோதனை செய்தனர்.
பின்னர், வீட்டில் இருந்த பெண் ஊழியரை விசாரணைக்காக பெண் அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். காலை 10.30 மணிக்கு ஒரு வாகனத்தில் பணம் எண்ணும் இயந்திரத்துடன் ஜெகத்ரட்சகனின் வீட்டிற்கு அதிகாரி வந்தார். காலை 11.50 மணியளவில் பணத்தை இயந்திரம் மூலம் எண்ணும் பணிகள் தொடங்கின.
மதியம் 12.15 மணிக்கு ஜெகத்ரட்சகனின் வீட்டிற்கு வந்த அதிகாரிகள், அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான பாரத் பல்கலைக்கழகத்திற்கு சென்று அங்குள்ள அதிகாரியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
ஆசிய விளையாட்டு- ஹாக்கியில் இந்தியாவுக்கு தங்கம்!
பள்ளிக்கரணையில் உள்ள ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனை உள்ளிட்ட இடஙக்ளில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.