Homeசெய்திகள்தமிழ்நாடுஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவு தொடக்கம்!

ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவு தொடக்கம்!

-

 

மதுரையில் நடைபெறும் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவுத் தொடங்கியது.

குடும்ப பிரச்சினை காரணமாக ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜனவரி மாதம் 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக, காளை உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் தனித்தனிப் பிரிவுகளில் இ- சேவை மையத்தில் முன்பதிவுச் செய்து வருகின்றனர்.

இதில் ஒரு ஊரில் விளையாடு மாடுபிடி வீரர், வேறு ஊரிலோ அல்லது மற்றொரு ஜல்லிக்கட்டு போட்டியிலோ விளையாட அனுமதி இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், டோக்கன் அளவில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க, கியூஆர் கோடு இணைப்புடன் டோக்கன் வழங்கப்படவுள்ளது.

அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!

இதனிடையே, ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. அதேபோல், பார்வையாளர்களுக்கு தேவையான வசதிகளும், மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவக்குழுக்கள் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திலேயே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

MUST READ