
ஜனவரி 4, 5 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சலார் திரைப்பட வெற்றி… நடிகர் பிரபாஸ் ரசிகர்களுக்கு நன்றி…
இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை வட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசையில் நகர்ந்து இன்று (ஜன.02) தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அதே பகுதிகளில் நிலவக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கைக்கு தெற்கே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஜனவரி 2, 3 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
லவ் இருக்கா? இல்லையா? அதிதி ராவ் – சித்தார்த் ஜோடியிடம் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்…
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 8- ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு அதிகாலையில் லேசான பனிமூட்டம் நிலவும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதியில் சூறைக்காற்று வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என அறிவுறுத்தியுள்ளது.