Homeசெய்திகள்தமிழ்நாடுஜப்பான் நிறுவனங்களுடன் ரூபாய் 819 கோடிக்கு ஒப்பந்தம்!

ஜப்பான் நிறுவனங்களுடன் ரூபாய் 819 கோடிக்கு ஒப்பந்தம்!

-

 

ஜப்பான் நிறுவனங்களுடன் ரூபாய் 819 கோடிக்கு ஒப்பந்தம்!
Photo: TN Govt

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், அடுத்தாண்டு ஜனவரியில் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒசாகா நகரத்தில் முன்னணி நிறுவனங்களின் உயரதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், கலந்து கொண்ட முதலமைச்சர், தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

புது போன் ஆர்டர் செய்த இளைஞருக்கு பழைய செல்போன் வந்ததால் பரபரப்பு

பின்னர், புல்லட் ரயில் மூலம் டோக்கியோ நகரத்துக்கு சென்ற முதலமைச்சர், ஜப்பான் தமிழ் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக இன்று (மே 29), ஜப்பானைச் சேர்ந்த ஆறு நிறுவனங்களுடன் ரூபாய் 818.90 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

அதன்படி, தமிழக அரசு- கியோகுட்டோ சாட்ராக் நிறுவனம் இடையே டிரக் வாகன பாகங்கள் உற்பத்தி ஆலை நிறுவ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் வாகன உதிரி பாகம் தயாரிக்கும் மிட்சுபா ஆலை விரிவாக்கத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கட்டுமானம் தொடர்பான வணிகள் மேற்கொள்ள ஷிமிசு நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பாலிகார்பனேட் தாள் தயாரிப்பு நிறுவனமான கோயீ நிறுவனம், தொழிற்சாலை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. உயர்தர எஃகு பாகங்கள் உற்பத்தி செய்ய சடோ ஷோஜி மெட்டல் வொர்க்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார்- விஜயபாஸ்கர்

இந்த நிகழ்வின் போது, தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இ.ஆ.ப., தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு இ.ஆ.ப., கியோகுட்டோ சாட்ராக் நிறுவனத்தின் தலைவர் சடோஷி ஒகோமோட்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ