தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 28) டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் தமிழ் சங்கங்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதைத் சிறுவர் மற்றும் சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்த முதலமைச்சர், ஜப்பான் நாட்டில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டு தெரிவித்தார்.
“10 மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து அபாயம்”- டாக்டர் ராமதாஸ் அறிக்கை!
இந்த நிகழ்ச்சியில், தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இ.ஆ.ப., தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு இ.ஆ.ப., ஜப்பான் நாட்டிற்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ், ஜப்பான் தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.