spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவீட்டின் நாட்டின் கண்களான பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் - ஜவாஹிருல்லா

வீட்டின் நாட்டின் கண்களான பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் – ஜவாஹிருல்லா

-

- Advertisement -
kadalkanni

வீட்டின் நாட்டின் கண்களான பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாறிவரும் நவீன யுகத்தில் பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறிச் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண் குழந்தையை ஈன்றெடுத்த பெற்றோர்களுக்கு, இறைவன் புறத்திலிருந்து வாழ்த்தும், நற்செய்தியும் உண்டு’ என்று எடுத்தியம்பினார்கள் நபிகளார். “பெண்ணின் பெருந்தக்க யாவுள” என்று வள்ளுவரும் போற்றுகிறார். குடும்ப வன்முறை, சமத்துவமின்மை, வரதட்சணை, பாலியல் சீண்டல்கள் போன்ற கொடுமைகளிலிருந்து பெண்களை காப்போம். பெண்கள் சுமையல்ல; அவர்கள் சுமைதாங்கிகள். இந்திய அளவில் பெண்களுக்கு எதிரான கூட்டு பாலியல் வன் கொடுமைகள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

பெண்களின் உரிமைக்காகவும், கல்வி, வேலைவாய்ப்பு, வளமான பாதுகாப்பான வாழ்க்கைக்காகவும், அவற்றை சீர்குலைக்கிற கொள்கைகளுக்கு எதிராகவும் முன்னிலும் வீரியமாக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களம் காணுவோம். மகளிர் அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ