ஜெயக்குமார் மரணத்தில் நிறைய சந்தேகங்கள் உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார் தனசிங் உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 100- க்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது!
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., “ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. ஜெயக்குமார் தனசிங் உயிரிழந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடக்கிறது. காங்கிரஸ் கட்சி ரீதியாக விசாரணை நடத்தி அறிக்கையை கட்சி தலைமையிடம் கொடுப்போம். குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும். அரசியல் பின்புலத்தோடு இருந்தாலும் நடவடிக்கை உறுதி என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.